Tamil News

பாக்மூடு நகரைச் சூழ்ந்த ரஷ்யப் படை; பின் வாங்கும் உக்ரேனிய படைகள்

உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்ய ஆக்கிரமிக்கத் துவங்கியிருப்பதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் தலைநகரமான கெய்வ் நகரத்தை ரஷ்ய உக்ரைனிய போரின் வெற்றிச் சின்னமாக கூறப்பட்டிருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அதன் பின் பாக்மூட் நகரை மிக தீவிரமாகப் பாதுகாக்க உக்ரைனிய படைகள் போராடி வருகின்றன.ஆனால் உப்பு சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்கப் போராடும் உக்ரேனியப் படைகள் ரஷ்யாவால் கைப்பற்றப்படுவது தவிர்க்க முடியாதது என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில பிரிவுகள் ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் ஏற்கனவே உக்ரேனிய பின்வாங்கலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.ஜோர்டான் பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் ஆஸ்டின், இந்த சண்டையின் அலை மாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை என அவர் கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உக்ரைனியர்கள் தங்கள் பாதுகாப்புப் படையை மாற்றியமைக்க முடிவு செய்தால், நான் அதைப் பின்னடைவாகப் பார்க்க மாட்டேன், என்று அவர் கூறியுள்ளார்.

 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த திங்களன்று உயர் தளபதிகளின் சந்திப்பின் போது பேசிய அவர் தற்காப்பு நடவடிக்கையைத் தொடரவும், பக்முட்டில் எங்கள் நிலைகளை மேலும் வலுப்படுத்தவும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.மேலும் உக்ரேனிய ஜனாதிபதியின் உதவியாளர் நகரத்தை தொடர்ந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்து இராணுவத்திற்குள் ஒருமித்த கருத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

பக்முட்டிற்கு மேற்கே 10 கிமீ தொலைவில் உள்ள சாசிவ் யார் நகருக்கு அருகில், உக்ரைனிய ராணுவ வீரர் ஒருவர் மாத சண்டைக்குப் பிறகுத் தனது பீரங்கியைச் சரிசெய்ய வந்ததாகக் கூறியுள்ளார்.பக்முத் ஆக்கிரமிக்கப்படும், நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம். என்று அவர் வாகனத்திலிருந்து பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.இதனிடையே ரஷ்யப் படைகள் கிட்டதட்ட பக்முட் நகரத்தை சூழ்ந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.

 

Exit mobile version