பதவியேற்றவுடன் சீனாவுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாகப் 10 சதவீத வரி விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மெக்சிக்கோவிலிருந்தும் கனடாவிலிருந்தும் தருவிக்கப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த இரு நாடுகளும் போதைப்பொருள்களையும், சட்டவிரோதக் குடியேறிகளையும் கட்டுப்படுத்தும் வரை வரி நடப்பில் இருக்கும் என்று Truth Social சமூக ஊடகத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப பொறுப்பேற்பார்.
வர்த்தகத்தில் அமெரிக்காவை முதன்மையாக்கச் சீனப் பொருள்களின் இறக்குமதிக்குக் கடும் வரி விதிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
(Visited 2 times, 2 visits today)