நான் விளையாட ஆரம்பித்தால் சீனா அழிந்துபோகும் – சீனாவுக்கு டிரம்பின் பகிரங்க எச்சரிக்கை

நான் விளையாட ஆரம்பித்தால் சீனா அழிந்துபோகும் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுக்கு சீட்டாட்ட பாணியில் எச்சரிக்கை விடுத்த டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.
“அவர்களிடம் சில அட்டைகள் இருக்கலாம். ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த அட்டைகள் உள்ளன. நான் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவற்றை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோகும். அதனால்தான் இப்போது அதைச் செய்யவில்லை.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்தும் வகையில் சீனா நடவடிக்கை எடுக்குமானால், அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். “அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனாவுக்கு 200 சதவீதம் வரி விதிக்கத் தயங்கமாட்டேன்,” என்றார்.
எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையே உறவு மாறாத வகையில் எதிர்காலத்தில் சீனாவுக்குச் செல்வதற்கான திட்டத்தையும் டிரம்ப் வெளிப்படுத்தினார்.
“இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் உருவாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.