Site icon Tamil News

தொடர் போராட்டங்களுக்கு தயாராகின்றனர் ஜேர்மனிய தொழிற்சங்கங்கள்

ஜெர்மனியின் அனைத்து வகை போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி  பெரும் எழுச்சியுடன் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்

அமெரிக்காவின் ஆணைப்படி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் விசுவாசமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

எனினும் இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களில் முதன்முறையாகத் தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை.

மார்ச் முதல் வாரத்தில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 350 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது அனைத்துப் போக்குவரத்துத் துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்

உக்ரைன்- ரஷ்யா நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version