Site icon Tamil News

தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்காதீர்கள் என ஏன் சொல்கிறது – சீனா கேள்வி!

தைவான் பிரச்சினையை பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்துவதை நிறுத்துமாறு வொஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே சீன கொள்கையின் அடிப்படைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும், சீனாவிற்கான அதன் அரசியல் உறுதிப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் வெளியிட்டுள்ள கருத்தில், மேற்படி கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெரிவித்த அவர், தைவான் பிரச்சினையை தவறாக கையாள்வது சீனா – அமெரிக்கா உறவுகளின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ

அத்துடன் தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா, ஏன் ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்கக் கூடாது எனக் கேட்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கோருவதற்கான வாஷிங்டனின் பகுத்தறிவைக் கேள்விக்குட்படுத்திய கின், அமெரிக்கா தைவானின் அழிவுக்கான திட்டத்தை மறைமுகமாக வகுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

பனிப்போர் மனப்பான்மை, முகாம் அடிப்படையிலான மோதல்கள் மற்றும் பிற நாடுகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் செயல்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version