டொலருக்குப் பதிலாக புதிய நாணயம் கொண்டுவர முயற்சி – ட்ரம்ப் விடுத்த பரபரப்பு எச்சரிக்கை
அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது இவ்வாறு வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, டொலருக்குப் பதில் புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100வீத வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, புதிய நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்றும், டொலருக்குப் பதிலாக வேறு நாணயத்துக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.