டிரம்ப் விதித்த வரிகளால் கடும் கோபத்தில் சீனா எடுத்த அதிர நடவடிக்கை

டிரம்ப் விதித்த வரிகளால் கோபமடைந்த சீனா, அமெரிக்காவிடமிருந்து வாங்கிய Boeing விமானங்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.
வரிகளால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவுகிறது. சீனா ஏற்கனவே இரு விமானங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக Boeing கூறியது.
மேலும் ஒரு விமானத்தைச் சீனா திருப்பி அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50க்கும் அதிகமான விமானங்கள் சீனாவிற்குச் செல்லவிருந்ததாக Boeing நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சீன வாடிக்கையாளர்கள் விமானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.
பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்குச் சீனா 125 சதவீத வரி விதித்துள்ளது.
சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து நம்பிக்கையாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வரிகள் குறைக்கப்படும் என்றும் ஆனால் அது பூஜ்யமாக இருக்காது என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.