டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் கிம் ஜாங் – அணு ஆயுதங்களை வலுப்படுத்த உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இறக்குமதி வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துதல், நிதி உதவி நிறுத்தம் என ஒவ்வொரு நாளும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் டிரம்புக்கே பிரஷர் கொடுக்கும் வேலைகளை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தொடங்கி இருக்கிறார்.
அமெரிக்காவின் ஜனாதிகதியாக பைடன் இருக்கும் வரை அடக்கி வாசித்த கிம் ஜாங் உன், மீண்டும் டிரம்ப் வந்ததும் தனது நாட்டின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்.
இதற்காக அணுத்துகள் தயாரிக்கும் ஆய்வகத்தை கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்த புகைப்படங்கள் அந்நாட்டு அரசின் ஊடககத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது டிரம்புக்கு பிரஷர் ஏற்றி அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து நிவாரணம், சலுகைகளை பெறுவதற்கான முயற்சி என சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.