சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் – இமானுவேல் மக்ரோன்!
சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கிற்கு இன்று விஜயம் செய்த அவர் இவ்வாறு கூறினார்.
பெய்ஜிங்குடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சிதைப்பதை ஐரோப்ப எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உக்ரைனில் நடைபெறும் நீடித்த போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனா ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)