சிங்கப்பூரில் காதல் தோல்வியால் வேலைக்கு செல்லாத இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250209-WA0002.jpg)
சிங்கப்பூரில் காதலில் தோல்வி அடைந்த இளைஞன் போலியான இறப்புச் சான்றிதழைத் தயாரித்ததற்கான 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
29 வயது பரத் கோபால் என்ற இளைஞன் வேலைக்குச் செல்லாமல் இருக்க அதைத் தயார்செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அண்மையில் காதலில் தோல்வி அடைந்த அவருக்கு வேலைக்குச் செல்ல மனமில்லாத நிலையில் இந்த செயலை செய்து வந்துள்ளார்.
அவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி முதலாளியிடம் தம்முடைய தாத்தா இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
துக்கம் அனுசரிக்கும் விடுப்பை வழங்குமாறு கோபால் கேட்டார். அதற்கு அவர் போலியான இறப்புச் சான்றிதழைத் தயாரித்தார். கோபாலுக்கு 3 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டது.
சான்றிதழ் போலி என்பது விரைவில் தெரியவந்துவிடும் என்று உணர்ந்த கோபால் ஒரு வாரத்துக்குள் நிறுவனத்திலிருந்து விலகினார்.
நிறுவனத்துக்கும் விரைவில் உண்மை தெரிந்தது. கோபாலுக்கு வழங்கப்பட்ட விடுப்பால் 500 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
போலியான பிறப்பு, இறப்புச் சான்றிதழைத் தயார் செய்வோருக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ 10,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.