வாழ்வியல்

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

நாம் சரியாக தூங்கவில்லை என்றால் அது அன்றைய நாளில் மோசமான பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், மனிதருக்கு தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால், அதுவே தவறான நிலையில் தூங்கும்போது அது பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றனர்.

பெரும்பாலும், குப்புறபடுத்து தூங்கும் பலர், அதுதான் தங்களின் சுகமான தூக்க நிலை என பலரும் கூறுவதுண்டு. ஆனால் இதுவே பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு குப்புற படுத்து தூங்குவதினால் முகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டு சருமம் விரைவில் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்தை உண்டாக்கும் என கூறுகின்றனர்.

மேலும், முதுகெலும்பு அருகில் இருக்கும் ரத்த குழாய்கள் இறுக்கமாக ஆரம்பித்து விடும் என்றும், அதுமட்டுமல்லாமல் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் சப்ளை தடை செய்யப்படுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இது போல் தூங்குவதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு கூட ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குப்புறப்படுத்து தூங்குவதனால் மார்பு பகுதி இறுகி உடலுக்கு சரியான ஆக்சிசன் கிடைக்காது. இவ்வாறு தொடர்ந்து படுத்து வந்தால் நெஞ்சு வலி கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வயிற்றுப் பகுதியில் அதிகமாக அழுத்தம் கொடுப்பதால் செரிமான கோளாறு, அல்சர், வாயு தொந்தரவு போன்றவற்றையும் இது ஏற்படுத்தும்.

இந்த நிலையில் தொடர்ந்து படுக்கும் போது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். மேலும், தண்டுவட பாதிப்பை கூட ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் எலும்பு அடர்த்தி குறைய துவங்கும். இதய கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிலையில் தூங்கவே கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தூங்குவதற்கு சரியான நிலை :
நேராகவோ அல்லது இடது புறமாக படுத்து தூங்குவதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குறட்டை விடும் பிரச்சனை உள்ளவர்கள் நேராக படுக்காமல் ஒரு புறமாக சாய்ந்து படுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், கர்ப்பிணிகள் வலது புறம் படுக்கக் கூடாது என்றும் அவர்கள் எப்போதும் இடது புறமாக படுத்து உறங்குவதே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .

மேலும், முதுகு வலி. கை கால் வலி இருப்பவர்கள் குப்புறப் படுத்து 15 நிமிடங்கள் மட்டும் உறங்கலாம் என்றும், இவ்வாறு செய்யும்போது முதுகு வலி குறைந்துவிடும். ஆனால், இந்த நிலையிலேயே தொடர்ந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான