ஐந்து வருடங்களுக்கு பின் கட்சி தலைமையகத்திற்கு வந்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து வருடங்களின் பின்னர் இன்று (06) மாலை கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதுடன், அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தலைமையகத்திலிருந்து வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கட்சியின் முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.
“ஐந்து வருடங்களுக்குப் பிறகு நான் சுதந்திரக் கட்சியின் அலுவலகத்துக்கு வந்தேன். கட்சியில் இருந்தாலும், ஐந்து வருடங்கள் கழித்து தான் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
சிறிசேனா என்னை வெளியேற்றிய பிறகு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைக்க வந்துள்ளோம். இது தயாரிக்கப்பட்டு, எதிர்காலத்தில் வழங்கப்படும்” என்றார்.