Site icon Tamil News

ஐந்து வங்கிகளில் சோதனை நடத்திய பிரான்ஸ் அதிகாரிகள்: வெளிவந்த மாபெரும் மோசடி

மாபெரும் மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள், ஐந்து வங்கிகளில் சோதனை நடத்தினார்கள்.

பல மாதங்களாக கவனமாக திடமிடப்பட்டு, 16 நீதிபதிகள், சுமார் 150 விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆறு ஜேர்மன் அதிகாரிகள் ஆகியோர் இந்த ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

Societe Generale, BNP Paribas, அதன் ஒரு பிரிவான Exane, நிதி நிறுவனங்களான Natixis மற்றும் பிரித்தானிய வங்கி ஜாம்பவான் HSBC ஆகிய நிறுவனங்களில் சொதனைகள் நிகழ்த்தப்பட்டன.

வரி ஏய்ப்பு மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த ரெய்டுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version