உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் எலோன் மஸ்க் அறிவிப்பு

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் எலோன் மஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியலை Forbes நிதி சஞ்சிகை வெளியிட்ட நிலையில் Tesla, X, SpaceX ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
பில்லியன் டொலருக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் 3,028 செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 16.1 டிரில்லியன் டொலராகும். பில்லியன் கணக்கில் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம் என தெரியவந்துள்ளது.
அடுத்த இடங்களில் சீனாவும் இந்தியாவும் இருப்பதாக Forbes குறிப்பிட்டது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் Meta நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 216 பில்லியன் டொலராகும்.
Amazon நிறுவனர் ஜெஃப் பெஸொஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு 215 பில்லியன் டொலராகும்.
Oracleஇன் நிறுவனர் லாரன்ஸ் எலிசன் நான்காம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு 192 பில்லியன் டொலராகும்.
LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னோல்ட் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு 178 பில்லியன் டொலராகும்.