உக்ரைனுக்கு மிக் போர் விமானங்களை வழங்க முன்வரும் போலந்து!
வரும் நான்கு முதல் ஆறு வாரங்களில் உக்ரைனுக்கு தேவையான மிக் போர் விமானங்களை வழங்க முடியும் என போலந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. இந்த தவலை போலந்து பிரதமர் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் பல மாதங்களாக F-16 F-16 Fighting Falconsஎன்ற ஜெட் விமானங்களைக் கேட்டு வருகிறது. இந்த ஏற்பாடு ரஷ்யாவுடனான போரில் சமநிலையைக் குறைக்கும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இதுவரை மேற்கத்திய நட்பு நாடுகள் குறித்த ஜெட் விமானங்களை வழங்க மறுத்துவிட்டன – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டும் இந்த விஷயத்தை இப்போதைக்கு கேள்விக்கு இடமில்லை என்று பரிந்துரைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)