இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க புதிய திட்டம்
இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது யுக்திய நடவடிக்கையுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தொல்லைகள் அல்லது துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் 109 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்து 48 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)