இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இடம்பெற்று0ள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பரீட்சைக்காக, 319 ஒருங்கிணைப்பு நிலையங்களின் ஆதரவுடன் நாடளாவிய ரீதியில் 2,312 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் பரீட்சை நிலையங்கள் தொடர்பில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க தயார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் 333,185 விண்ணப்பதாரர்கள் கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 253,390 பள்ளி விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.
இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 79,795 ஆகும்.
இதேவேளை, பரீட்சை மோசடிகளை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
நாளை தொடங்கும் தேர்வு டிசம்பர் 20-ம் திகதி வரை நடைபெறுகிறது.