இலங்கை செய்தி

இலங்கைக்கு ஜப்பான் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு கார் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுமாயின் ஜப்பானில் 3 வருடங்கள் பயன்படுத்திய உரிய தரத்தில் உள்ள வாகனங்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளாது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

4 வர்க்க வாகனங்களை இறக்குமதி செய்ய அண்மையில் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. தனியார் வாகன இறக்குமதியாளர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அதற்கான அனுமதி கிடைக்கப் பெறும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறான பின்னணியில் புதிய அனுமதி கிடைக்கப் பெற்றால் ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட நவீன ரக டொயோட்டா கொரோல்லோ க்ரோஸ் ரக மகிழுந்தை வரியின்றி நாட்டிற்கு 55 முதல் 60 இலட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொன்டா வெசல் ரக மகிழுந்தை 60 முதல் 65 இலட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் இறக்குமதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சுசுகி வெகன் ஆர் ரக மகிழுந்தை 35 இலட்சம் ரூபாவிற்கு இறக்குமதி செய்ய முடியும்.

அதேநேரம், டொயோட்டோ யாரிஸ் ரக மகிழுந்தை 27 முதல் 30 இலட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை