அமெரிக்க மக்களை வாட்டி வதைக்கவுள்ள பனிப்பொழிவு – 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம்
அமெரிக்காவை அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்றும் கடும் மழையும் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான குளிர்காலத்தின் தாக்கத்தைச் சந்திக்க அமெரிக்க மக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கிட்டத்தட்ட 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என்று வானிலை ஆய்வகம் எச்சரிக்கிறது.
ஏற்கனவே 30 மில்லியன் மக்களுக்குக் கடுங்குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த பனி, பனிக்கட்டி, மழை, பலத்த காற்று ஆகியவை முன்னுரைக்கப்படுகின்றன.
மேற்கு மாநிலங்களில் உறையவைக்கும் வானிலை, பெரிய அளவில் மின்தடையை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
சில வட்டாரங்கள் பத்தாண்டு பார்க்காத அடர்ந்த பனியைச் சந்திக்க நேரலாம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை கூறுகிறது.
30 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி குவியலாம். அமெரிக்க மக்கள் இந்தப் பருவத்தில் இதுவரை உணராத குளிர்காற்றை எதிர்கொள்ள நேரிடலாம்.