வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீன் உணவால் கை, கால்களை இழந்த தாயார்..!

அமெரிக்காவில் திலாப்பியா மீன் உணவை சாப்பிட்ட தாயார் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, தற்போது கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மிக ஆபத்தான பாக்டீரியாவால் மாசுபட்ட திலாப்பியா மீன் உணவை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ்.

இவரே வியாழக்கிழமை உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்கு உள்ளானார். சுமார் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்திருந்தனர். உள்ளூர் சந்தை ஒன்றில் இருந்து திலாப்பியா மீன் வாங்கியுள்ளார் லாரா பராஜாஸ்.

Tilapia fish warning: First symptoms of mum who lost 4 limbs after eating  undercooked fish - Mirror Online

அந்த உணவை சமைத்து சாப்பிட்ட நிலையிலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லாராவுக்கு கோமா நிலையில் சிகிக்கை முன்னெடுக்கப்பட்டது.

California mom, 40, loses all four limbs after she caught vibrio from eating  undercooked TILAPIA for dinner | Daily Mail Online

கை விரல்கள், கால் பாதங்கள், கீழ் உதடு என மொத்தமும் கறுத்துப் போனது. அவரது சிறுநீரகமும் செயலிழந்து வந்தது. மருத்துவர்கள் தெரிவிக்கையில், Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை அவர் உட்கொண்டுள்ளார்.

See also  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பின் வெற்றி - ஒரே இரவில் மாறிய தங்கத்தின் விலை

இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, காயங்களுடன், இந்த பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் என கூறுகின்றனர்.உடலில் நோயெதிர்ப்பு சக்தியை இந்த பாக்டீரியா பலவீனமாக்கும் எனவும் ஆண்டுக்கு 150 முதல் 200 பேர்கள் வரையில் இந்த பாக்டீரியா பாதிப்பால் சிகிச்சை பெறுவதாகவும், இதில் ஐந்தில் ஒருவர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content