Site icon Tamil News

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை!

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும்  சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும் இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது இல்லை எங்களிற்கே சொந்தம் துறைமுகத்தின் செயற்பாடுகளிற்கான பொறுப்பை நாங்கள் சீன வர்த்தகர்களிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கொழும்பு துறைமுக அதிகார சபையினால் அதனை நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே சீன வர்த்தகர்களிடம் கையளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பெரும் இழப்பை நஸ்டத்தை எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி  சீன வர்த்தகர்களை தவிர வேறு எவரும்; அந்த துறைமுகத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை அதனை மூடுவது மாத்திரமே எங்களிற்கான ஒரே வழியாக காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version