Site icon Tamil News

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில்

வல்லரசு நாடுகளின் போட்டி இலங்கையில் சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்த தடையாக அமையாது – ரணில்

பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட அகுஸ் உடன்படிக்கை சீனா மற்றும் குவாட் நாடுகளுக்கு இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் கடந்த 24ஆம் திகதி சூம் தொழிநுட்பம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணலில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகள், குறிப்பாக தாய்வான், இலங்கையின் எதிர்காலத்திற்கு அது இந்து சமுத்திரத்தில் கசிந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 25 வருடங்களில் இந்து சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் உள்ள ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கை முன்னேறி பாரிய அபிவிருத்தி இலக்கை அடையும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

பழைய பொருளாதாரத்தின் சாம்பலில் இருந்து வெளியேறி ஆசிய பிராந்தியம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்தியுடன் கைகோர்த்து புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுவான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், அது வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version