ரஷ்ய படையெடுப்பினால் 11 மில்லியன் அகதிகள் போலந்தில் தஞ்சம்!
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து மில்லியன் கண்க்கான உக்ரேனிய அகதிகள் போலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏறக்குறைய 11 மில்லியன் அகதிகள் போலந்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 87 வீதமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என போலந்து பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போரில் இருந்து தப்பியோடிய அனைவருக்கும் போலந்தில் தங்குமிடம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)