ரஷ்யா வானத்தில் மர்ம பொருள் – இரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகள்

ரஷ்ய வானத்தில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தென்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
St. Petersburg நகரிலுள்ள Pulkovo விமானநிலையம், எல்லா விமானச் சேவைகளையும் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.
அந்தப் பொருள் ஆளில்லா வானூர்திபோல் தென்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிவரை எல்லா விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக, St. Petersburg நகரத்தின் அதிகாரத்துவ Telegram தளத்தில் தெரிவித்தது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
Pulkovo விமான நிலையத்தின் 200 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள வான் வெளி உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 1.20வரை மூடப்படுவதாக, அரசாங்க TASS செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வானில் தென்பட்ட அடையாளம் தெரியாத பொருளைப் பற்றிப் புலனாய்வு செய்ய, போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாக மற்றொரு செய்தி நிறுவனம் கூறியது.
இருப்பினும் அதை உறுதி செய்ய முடியவில்லை என்று Reuters செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.