யாழில் 2 பிள்ளைகளின் தநதைக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றை அமைத்து அங்கு தங்குவதை வழமையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் பாரிய வெட்டுக் காயங்களுடன் சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)