மனைவியை கொலை செய்ய இன்சுலின் ஊசியை பயன்படுத்திய வைத்தியர்!
தனது இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியைப் பலவந்தமாகச் செலுத்தி அவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருமணமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவருடன் அடிக்கடி தகராறு செய்து வருபவர் எனவும், இதன்காரணமாகவே குறித்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.