Site icon Tamil News

போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கம் அறிவிப்பு

எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால்  தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க மேற்படி அறிவித்துள்ளது.

எமது ஒன்றிணைந்த நீர்வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம்.

ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் சபை தலைவராே அல்லது அமைச்சராே எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை. அதனால் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் திர்மானித்தாேம்.  அதன் பிரகாரம் நாங்கள் அலுலக மற்றும் நுகர்வோர் சேவை நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து ஒதுங்கிக்கொள்கிறோம்.

அத்துடன் எமது தொழிற்சங்க போராட்டம் காரணமாக மக்களுக்கு ஏற்படுகின்ற செளகரியங்களை கருத்திற்கொண்டுஇ நீர் சுத்திரகரிப்பு நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டு செல்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version