தமிழகத்தின் சென்னையில் 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாக வெளியேற வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளனர்.
அப்போது ரிஷி தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ரிஷியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியதால் மனமுடைந்த ரிஷி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.