புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி மாலியின் எல்லை பகுதியிலும், மேலும் இரண்டு மாகாணங்களிலும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் இயக்கம், நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)