Site icon Tamil News

பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பேராயர் வலியுறுத்தல்!

பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பாரிய பொறுப்பாகும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான நாடொன்றை கையளிக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரினதும் தார்மீக பொறுப்பாகும்.

இதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பேராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சட்ட மூலத்திற்கு எதிராக செயற்பட வேண்டியது அவசியம் என அவர்  வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியன்று  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 2023 எனும் சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது.  பயங்காரவாத தடுப்பு சட்டத்திற்கான ஏற்ற சரியான வரைவிலக்கணத்தின்படி இந்த சட்ட மூலம் அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version