பசில் ராஜபக்க்ஷ பற்றி உண்மையை உடைத்த சன்ன ஜயசுமண!

பசில் ராஜபக்க்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்பாளராக சபுமல் வலவ்வத்த என்ற நபர் பெயரிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆவணங்களில் அந்த நபரின் பெயர் இருப்பதாகவும் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.
அதன்படி செயலாளர் சாகர காரியவசம் நாட்டுக்கு பொய் சொல்கிறார் எனவும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் வேறு வேறு எனவும் ஜயசுமன தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)