நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!
நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சிக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
200 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 184 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
உக்ரைன் படையெடுப்பை தொடர்ந்து எல்லைகளை பாதுகாத்துக் கொள்ள பின்லாந்து கடந்த ஆண்டு மே மாதம் விண்ணபித்தது.
ஹங்கேரிய ஜனாதிபதி கட்டலின் நோவக், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ உள்ளீடுகளை கூடிய விரைவில் அங்கீகரிக்க நேட்டோவிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஹங்கேரி மற்றும் துருக்கியால் பின்லாந்தின் முயற்சி பின்னடைவை சந்தித்தது.
நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கடந்த வாரம், ஜூலை மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு இரு நோர்டிக் நாடுகளையும் உறுப்பினர்களாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறினார்.
(Visited 5 times, 1 visits today)