தேர்தலை மார்ச் 19இற்கு முன் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை!
நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவித்துள்ள நிலையில் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கையை எடுக்குமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில், திறைச்சேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது எனவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இனியும் தேர்தல் வாக்கெடுப்பை தாமதிக்காமல் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
(Visited 2 times, 1 visits today)