தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடிதார்
தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு அடித்ததால் பயணி ஒருவர் தாடையில் பட்டு காயம்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நின்னகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதம் (26) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு காலை வீட்டிற்கு புறப்பட்ட கவுதம் சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில் தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் ஏறிச் சென்றுள்ளார்.
இதையடுத்து மின்சார ரயில் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கும் சானடோரியம் ரயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் மீது கற்கலை கொண்டு அடித்துள்ளனர்.
அப்போது ரயிலில் ரயிலில் நின்று கொண்டிருந்த கௌதம் மீது கற்கள் விழுந்ததில் தாடை க பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.மேலும் அதே பெட்டியில் இருந்த ரயில்வே போலீசார் மீதும் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சானிட்டோரியம் ரயில் நிலையம் சென்ற பின் கௌதமை ரயில்வே போலீசார் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ரயில் மீது கற்களை எரிந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்லும் மின்சார ரயில் மீது கற்கள் மற்றும் கட்டையால் பயணிகளை தாக்கி செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ரயிலில் படிக்காட்டில் அமர்ந்து சென்றவரை கட்டையால் அடித்து கீழ விழுந்ததில் கால் துண்டான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
எனவே ரயில் மீது கற்கள் மற்றும் கட்டையால் பயணிகளை தாக்கும் நபர்களீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்