Site icon Tamil News

தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட முஸ்தீபு : பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையின்போது கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான ஆரம்பப் பேச்சுக்கள் திருப்திகரமான நிலையில் இல்லாத சூழலில் மீண்டும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அடுத்து வரும் காலத்தில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்திய எந்தவொரு விடயத்துக்கும் தமது தரப்பு ஆதரவளிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுக்களை அக்கட்சியுடன் முன்னெடுப்பதற்கு முனைப்பு காண்பிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version