Site icon Tamil News

தமிழர்களின் பூர்வீக பகுதிகளை சூறையாடும் அரசு : கவலையில் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன்படி தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் மணற்கேணிப் பகுதியையும் அவ்வாறே பௌத்த பிரதேசமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு தமிழ்மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண்பகுதியில் வைரவர் ஆலயம் இருந்ததாகவும், அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமொன்று இருந்ததாகவும், அவ்வாறு இருந்த கோவில்களை உடைத்தழித்து தற்போது அந்த இடங்களை பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மணற்கேணிப் பகுதியில் இருந்த சைவ வழிபாட்டு அடையாளங்கள் உடைக்கப்பட்டு அங்கும் பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதிகளை நேற்றைய தினம் முன்னாள் வடமாகாண உறுப்பினர் துரைராச ரவிகரண் பார்வையிட்டார்.

Exit mobile version