ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளிய பிரான்ஸ் – அதிகரித்த பணக்காரர்கள்
பிரான்ஸில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
மில்லியனுக்கும் அதிகமான சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது.
மில்லியனர்’ சொத்து பெறுமதியுடன் பிரான்ஸில் தற்போது 827,000 குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பணக்காரர்களைக் கொண்ட உலக பட்டியலில் நான்காவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
குறிப்பாக கடந்த ஒருவருடத்தில் மட்டும் இந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் 50,000 புதிய மில்லியனர் உருவாக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்த அசுர வளர்ச்சியை பிரான்ஸ் அடைந்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)