Site icon Tamil News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார்

இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு  இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை.

எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களை பாதுகாக்கவும், ஊழலை  முற்றாக ஒழிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில்  கவர்ச்சிகரமான  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை  உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

நமது நாட்டிற்கான இந்த நோக்கை  அடைவதற்கு  சர்வதேச நாண நிதியத்தின்  திட்டம் மிகவும் முக்கியமானது.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கிறோம்.   மேலும்  எங்கள் பணி முன்னோக்கிச் செல்லும் சூழலில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும்  மேம்படுத்தவும்  எமது கடன் வழங்குநர்களை ஊக்குவிக்கிறேன் எனவும் இன்று தெரிவித்திருந்தார்.

Exit mobile version