Site icon Tamil News

சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பில் வங்கித் துறையுடன் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல்

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் அவற்றில் காணப்படும் நிதிச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக வங்கித்துறையுடன் கலந்துரையாடியது.

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  மதுர விதானகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கித் துறையின் பிரதிநிதிகளால் நாட்டில் தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்துக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன. பிரதானமாக சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்துறை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஒவ்வொரு துறை தொடர்பிலும் சரியான தகவல்கள் அடங்கிய தரவு அமைப்பொன்றை தயாரித்து பராமரிப்பதன் அவசியம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்யும் போது அரச நிறுவனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், வங்கி துறையினரால் இத்துறையை மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் நீண்டகால முன்மொழிவுகளை எழுத்து மூலமாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version