சபோர்ஜியா பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு,10 பேரை காணவில்லை!
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான சபோர்ஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலியானர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் மற்றொரு நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் எட்டுபேர் காயமடைந்துள்ளதுடன், 10 பேர் காணமல்போயுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)