சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்த இருவர் கொழும்பில் கைது!
கொழும்பு கெசல்வத்தை டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் 8.2 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும் மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)