Site icon Tamil News

கோடி கணக்கில் சுருட்டிய நிதி நிறுவனங்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்,

சதாசிவம் சிட்பண்ட்ஸ், ஆகிய நிதி நிறுவனங்களை கடந்த 1998 முதல் நடத்தி பொது மக்களிடம் தாங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு மாதம் 18 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி பல ஆண்டுகளாக ஏல சீட்டுகள் நடத்தி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட டெபாசிட் பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனங்களை நடத்தி வந்த நிர்வாக இயக்குனர்கள் சதாசிவம், அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஏமாற்றுதல், மோசடியில் ஈடுபடுதல்,  உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். சுமார் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version