Site icon Tamil News

கொழும்பு புறநகர் பகுதியில் இளம் யுவதிக்கு நோர்ந்த கொடுமை

போக்குவரத்து வசதி செய்து தருவதாக கூறி 18 வயது யுவதியை லொறியில் ஏற்றி வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று வாத்துவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

சந்தேகநபர்கள் வாத்துவ பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பலமுறை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ​​அருகில் சிறிய லொறி ஒன்று நிறுத்தி அடையாள அட்டையைக் காட்டி கவனமாக லொறியில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியதாகவும், வாகனத்தை நிறுத்தாமல் வாத்துவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு செலுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், யுவதி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டதாகவும், அவரது தாயார் சிறையில் இருப்பதாகவும், அவரது மூன்றாவது கணவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version