கொழும்பில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கழிவகற்றல் கட்டமைப்பிற்குள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் நகர சபை ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளுக்காக பிற்பகல் கொழும்பு நகர சபையைச் சேர்ந்த குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது குறித்த கட்டமைப்பிற்குள் நுழைந்த ஊழியர்கள் இருவரும் சுயநினைவை இழந்துள்ளனர்.
விஷவாயு உட்சென்றதால் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)