செய்தி தமிழ்நாடு

கவுன்சிலர் புருஷன் எனக்கு உரிமை உள்ளது

சென்னை நங்கநல்லூர் அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் சேர்ந்தவர், ராகவன் என்பவருடைய மகன் பொன்ராஜ் அசோக் . பொன்ராஜ் அசோக்கிற்கு, தில்லை கங்கா நகர் 40வது தெருவிற்கும்,

நான்காவது மெயின் ரோடு சந்திக்கும் இடத்தில் சொந்தமான மனைப்பிரிவு  உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமாக இரண்டு மனை பிரிவுகள் உள்ளன இவை அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனை பிரிவானது சென்னை பெரு மாநகராட்சிக்கு உட்பட்ட 162 வது வார்ப்பகுதியில் உள்ளது.

இந்நிலையில் இந்த மனைப்பிரிவில் தனக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறி பாஸ்கர் என்பவர் தொடர்ந்து பொன்ராஜ் அசோகைக்கு பிரச்சனை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பாஸ்கர் என்பவர் 175 கவுன்சிலராக உள்ள மகேஸ்வரி என்பவரின் கணவரான முருகவேலுக்கு நெருக்கமானவர் மற்றும் தொழிலில் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.

முருகவேல் தன்னுடைய மனைவி 175 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு தனது நண்பர்கள் மூலம் பல இடங்களை வளைத்து போடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன,

பாஸ்கர் மற்றும் முருகவேல் இணைந்து கொண்டு 162 வது வார்டு பகுதியில் இருக்கும் மனை பிரிவில் போடப்பட்டிருந்த கொட்டகை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் பாஸ்கர் மதில் சுவர் அமைக்கும் பணியை செய்துள்ளார்,

அது தட்டி கேட்ட பொன்ராஜ் அசோக்கை மிரட்டியது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்ற அசோக்கின் புகாரை காவல் நிலையத்தில் வாங்க விடாமலும் தனது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பொன்ராஜ் அசோக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தாம்பரத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் அரசு அதிகாரியை மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் தாம்பரம் அருகே சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கணவர் இது போன்ற செயலில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Avatar

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page