Site icon Tamil News

கண்டி முன்பள்ளி ஆசிரியை கொலை வழக்கு; வெளிவரும் திடுக்கிம் தகவல்கள்!

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை அஞ்சலி சாபா செனவிரத்னவின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியை படுகொலை செய்யப்பட்டமப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி சாபா செனவிரத்ன என்ற முன்பள்ளி ஆசிரியை ஒருவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார். இலுகென்ன பிரதேசத்திலுள்ள முன்பள்ளிக்கு தனது வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை , கினிஹேன மயானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வெட்டுக்காயத்துடன் 100 மீற்றர் தூரத்திலுள்ள தனது அத்தையின் வீட்டுக்கு சென்று தன்னைக் காப்பாற்றுமாறு ஆசிரியை கதறியதாக , பொலிஸார் தெரிவித்தனர்.ஆசிரியையின் வீட்டில் இருந்து 700 மீற்றர் தொலைவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. பலத்த காயங்களுடன் இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆசிரியை வீட்டிலிருந்து புறப்படும்போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது காதல் தொடர்பின் அடிப்படையில் நடந்த படுகொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version