கணவனை கொலை செய்த இளம் மனைவி

பொலன்னறுவை, புலஸ்திகம, கேகலுகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேகலுகம புலஸ்திபுர பிரதேசத்தில் வசிக்கும் நிலந்த நந்தன குமார என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வாழ்வாதாரத்திற்காக வாடகை வேலை மற்றும் தேங்காய் உடைக்கும் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவதும், இன்றும் அவ்வாறான தகராறு அதிகமாகி கணவனை மனைவியே கொலைசெய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)