Site icon Tamil News

ஐ.எம்.எஃபின் 10 நிபந்தனைகளை அரசாங்கத்தால் செய்ய முடியும் – மைத்திரி!

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம். ஏப்ரல் மாதம் நடுப்பகுதிக்குள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னேற்றகரமான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தல்.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமவாயங்களுக்கு அமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை இயற்றல் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் பிரதானவையாக காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு,குடும்ப ஆட்சி இல்லாத மக்களாணைக்கு மதிப்பளிக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும்  என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம் என்றார்.

Exit mobile version