Site icon Tamil News

எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 45 நாட்டகளுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கைக்கு ஆபத்து!

எம்.வி. எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கத் தவறினால் இலங்கை சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையொன்றிலேயே சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்டத்திற்கமைய சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் இழப்பீடு கோரப்பட வேண்டும். தற்போதைய நிலைவரத்திற்கமைய  கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இலங்கைக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளுக்கு இழப்பீடாக 6.4 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  தற்போது அமைச்சரவை நீதி அமைச்சு,  சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து  சிங்கப்பூரில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முடிவை எடுத்துள்ளன. இது நிச்சயமற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிகாரிகள் தேவையான நடைமுறைகளுக்கு ஏற்கனவே தயாராகி வருவதாகவும்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் நிலைமையை அறிந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த முயற்சிக்கான செலவிற்காக இலங்கை 4.5 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக. எவ்வாறாயினும்இ தேவையான காலத்திற்கு முன்னர் இழப்பீடு கோரிக்கையை தாக்கல் செய்யத் தவறியமையால் 10 பில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையை இலங்கை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version