Site icon Tamil News

உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழு  நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் கூடியது.

இந்த குழுவை ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், (அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட) மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் நிறுவப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தல், அந்த நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகளின் முகாமைத்துவம்,  அனைத்து விடயங்களையும் கண்காணித்தல் மற்றும் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பல்வேறு  முறைமைளை இந்த குழுவின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பான சில விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

Exit mobile version